Skip to main content

எனக்கு 79 வயசுப்பா... கடைசி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன்... ஊராட்சி மன்றத் தலைவரான வீரம்மாள்

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

 

ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

 

veerammal



மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை தோல்வியை தழுவிய மூதாட்டி வீரம்மாள் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 193 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.  கடந்த இரண்டு முறை ஊராட்சி மன்ற தேர்தலில் நின்று தோற்றாலும் தனது விடாமுயற்சி காரணமாக இந்தமுறை வெற்றி பெற்றது ஊர் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 79 வயதில் வீரம்மாள் வெற்றி பெற்ற செய்தி ஊடங்கங்ளில் வெளியானதை பார்த்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவரைப் பற்றியே பேசுகின்றனர். 
 

 

வெற்றி பெற்றது தொடர்பாக பேசிய வீரம்மாள், எனக்கு 79 வயசுப்பா, ரெண்டு முறை தோத்துப்போனேன். இப்ப 3வது முறையா போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். கடைசி மூச்சு வரை ஊர் மக்களுக்காக உழைப்பேன். இந்த வயதிலும் நான் உழைப்பேன்னு என்னை நம்பி ஓட்டுபோட்ட மக்களுக்காக உழைப்பேன் என்றார். 



 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

குடிகாரர்களால் அச்சம்; சுவர் ஏறி குதித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகள்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Fear of drunkards; Students go to college by jumping the wall lake

 

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் குடித்துவிட்டு ரகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சத்தில் உள்ள கல்லூரி மாணவிகள் கல்லூரியின் காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி குறித்து கல்லூரிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

மேலூர் அரசு கல்லூரி அருகே 120 மாணவிகள் தங்கும் வகையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதி கட்டப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் கல்லூரிக்கு செல்லும் பொழுது அந்த வழியில் குடித்துவிட்டு திரியும் சில நபர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதோடு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் கல்லூரிக்கு வாயில் வழியாகச் செல்லாமல் குடிகாரர்களுக்கு பயந்து கொண்டு கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை மீதி ஏறி குதித்து கல்லூரிக்கு செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.