Advertisment

ரசிகனாக ரஜினிக்கு ஆலோசனை சொல்கிறேன்... கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவரிடம், வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரஜினி ரசிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

rajini

அதற்கு அவர், ரஜினி ரசிகர்கள் வேலூர் போகட்டும், வேலூர் கோட்டையை பார்க்கட்டும். அங்கு நிறைய சினிமா தியேட்டர்கள் இருக்கிறது. ரஜினியின் லேட்டஸ்ட் சினிமா ஒன்றை போட்டு பார்த்துவிட்டு வரட்டும். அதையெல்லாம் அவர்கள் செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வேலூரில் யார் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதை ரஜினி ரசிகர்களால் தீர்மானிக்க முடியாது.

Advertisment

திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு எந்த திரைப்பட நடிகர்களும் அரசியலில் பிரகாசித்தது கிடையாது. எனவே அந்த வீண் முயற்சி அவருக்கு வேண்டாம் என்று அவருடைய ரசிகன் என்கிற வகையில் நான் என்னுடைய ஆலோசனை சொல்லுகிறேன் என்றார்.

Election Vellore K S Azhagiri rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe