ddd

Advertisment

பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பிரபு குமார், நந்தினி தம்பதியர் கடந்த 5 ஆண்டுகளாக இத்தோட்டத்தில் தங்கிவிவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு சிவகுமார் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு குமார் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக கணவன் - மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்பொழுது திடீரென குடியிருக்கும் வீட்டிற்கு சுமார் 25 அடி தூரத்தில் உள்ள கிணற்றில் நந்தினி குடிபோதையில் ஓடிபோய் விழுந்துள்ளார். அருகில் இருந்த கணவன் பிரபுகுமார் மனைவியை காப்பாற்ற அவரும் ஓடிப்போய் கிணற்றில் விழுந்தார்.

இதனைப் பார்த்த பிரபுகுமாரின் அத்தை மகன் மகேந்திரகுமார் சத்தம் போட, கிணற்றில் விழுந்த இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.தோட்டத்து உரிமையாளர் தகவல் கொடுத்ததின் பேரில் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும்தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.