Advertisment

மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் கணவர் பணியிட மாற்றம்..!

Husband changes job as wife contests election

Advertisment

அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக சார்பில் ராணி ரஞ்சிதம் போட்டியிடுகிறார். அவரது கணவர் வெள்ளைத்துரை அதே ஊரில் மாநகர கூடுதல் துணை ஆணையராக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியான விஷ்ணு செய்தியாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்போது மாநகர காவல் ஆணையர் அன்பு, தேர்தல் அதிகாரியான விஷ்ணுவிடம், “மனைவி போட்டியிடும் தொகுதியில் கணவன் காவல்துறையில் பணிபுரிவது பற்றி என்ன நினைக்கீர்கள்?”என்று கேட்டார்.

அப்போது தேர்தல் அதிகாரியான விஷ்ணு, “மனைவி போட்டியிடுவது ஜனநாயக கடமை. இருந்தபோதிலும் தேர்தல் விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு உடனே சென்னை தலைமை காவல் நிலையத்தில் பேசியதை அடுத்து, அவரது கணவன் வெள்ளத்துரை சென்னை மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார். வெள்ளத்துரை நேற்று (17.03.2021) சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அங்குதான் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது.

ammk ambai Tirunelveli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe