Advertisment

என்னது... சிறுநீர் பாசனமா? - மீண்டும் வைரலான எச்.ராஜா!   

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் 9ஜூலை 2018 அன்றுபாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். பாஜகவின் மத்திய தலைவர்கள் தமிழகத்தில் உரையாற்றும்போது சமீப காலமாக பெரும்பாலும் எச்.ராஜாதான் அதை மொழிபெயர்ப்பார். அப்படி நேற்றும்அமித்ஷாவின் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்த்தார்பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

Advertisment

h raja and amit shah

பாஜக அரசின் சாதனைகளை அமித் ஷா பட்டியலிட்ட போது, 'மைக்ரோ இரிகேஷன்' (MICRO IRRIGATION) என்று குறிப்பிட்டு அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் கூறினார்.'மைக்ரோ இரிகேஷன்' (MICRO IRRIGATION) என்பது நுண்ணீர் பாசனம் என்னும் அர்த்தமுடையது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஆனால், எச்.ராஜா அதை உடனடியாக மொழி பெயர்க்கும்போது

"அதாவது சிறுநீர் பாசன திட்டங்களுக்காக 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது"

என்று கூறினார். 'சொட்டு நீர் பாசனம்' (DRIP IRRIGATION)என்று குறிப்பிட்டிருந்தாலாவது அது விவசாயத்துடன் தொடர்புள்ளது 'சிறுநீர்' என்று குறிப்பிட்டது வேறு அர்த்தத்தை அளிக்கிறது என்று கூறி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மீண்டும் ஒருமுறைவைரலாகி இருக்கிறார் எச்.ராஜா.

Amit shah amithshah h.raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe