ADVERTISEMENT

"விரைவில் ராமர் கோயில் கட்டபடும்" தீர்ப்பு குறித்து எச்.ராஜா அதிரடி!  

04:16 PM Nov 09, 2019 | Anonymous (not verified)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


மேலும் அயோத்தி வழக்கு குறித்து மோடி கூறிய போது, அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து யாரும் எந்தவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், தீர்ப்பு எப்படியிருந்தாலும் நாட்டில் அமைதியை காக்க அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து காரைக்குடியில் எச்.ராஜா பேசும் போது, அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக நூற்றாண்டு கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருப்தியளிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து அமைதி காக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT