Advertisment

எச்.ராஜா பங்கேற்ற விழாவில் அனுமதியின்றி வரிசையாக வைக்கப்பட்ட பேனர்கள்...கொந்தளிப்பில் மக்கள்!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisment

bjp

bjp

நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட்டத்தில், மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்றுள்ளார். அப்போது கொட்டகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, வழிநெடுகிலும் ஏராளமான பேனர்களை பாஜகவினர் அனுமதியின்றி வைத்துள்ளனர். இந்த பேனர்களை அகற்ற அப்பகுதி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிருப்தியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

complaint police issues banners h.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe