“திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது” - வைகைச்செல்வன் சூசகம்

hole has appeared in the DMK alliance says Vaigaichelvan

‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விசிக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திருமாவளவனை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, ‘பேசு பேசு நல்லா பேசு’ என்ற தான் எழுதிய புத்தகத்தை வைகைச்செல்வன் திருமாவளவனிடம் கொடுத்தார். தொடர்ந்து இருவரும் அரசியல் குறித்துக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வனிடம் திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஆளும் கட்சியாக இருக்கும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். இதை நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இது முதல் கட்டம் தான். அதிமுக கூட்டணி நாளுக்குநாள் வளர்ச்சிபெறும். இனியும் பலர் வரவுள்ளனர்” என்று பதிலளித்துள்ளார்.

ஆனால், மதச்சார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்வோம் என்று பலமுறையில் விசிக தலைவர் திருமாவளவன் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

admk Thirumavalavan vaikaiselvan vck
இதையும் படியுங்கள்
Subscribe