Advertisment

வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினிகாந்த்: கடம்பூர் ராஜூ 

Rajinikanth

வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

Advertisment

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போதுஅவர்,

அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் இல்லை. அவர் அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் பேசுகிறார். அவர் அ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு பேச வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவரின் உடல், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒரு நாள் அரசு பொது விடுமுறை வழங்கி, ஒரு வாரம் அரசு நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து, துக்கம் அனுசரித்து உள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் நன்றி கூற வேண்டும். தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்திலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 11 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்துள்ளனர் என்றார்.

rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe