Skip to main content

அம்பேத்கர் இருந்திருந்தால் திருமாவளவன் வழி... ‘இந்து’ என்.ராம் பேச்சு

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டுவரும் தலித் அல்லாத சான்றோரைப் போற்றும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு தோரும் அம்பேத்கர் சுடர் எனும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன் , காமராசர் கதிர், காயிதேமி்ல்லத் பிறை , செம்மொழி ஞாயிறு ஆகிய விருதகளும் சான்றோர்களுதக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெருவோர்களுக்கு தலா ரூ. 50,000 பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
 

தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடுவோரை ஊக்கப்படுத்தும் தலித் அல்லாத சனநாயக சக்திகளை அடையாளப்படுத்துவதும் தலி்த் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் விடுதலை சிறுத்தைகளையின் கடமை என்ற வகையில் இந்த விழா ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

 

vck



அந்த வகையில் இந்த 2019 ஆண்டிற்கான அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா  08.08.19 தேதி சென்னை தேனாம்பேடேடை காமராசர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் அம்பேத்கர்சுடர் விருது இந்து என்.ராம் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது டாக்கடர் வி. விஸ்வநாதன் அவர்களுக்கும் , காமராசர் கதிர்  விருதனை எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது டாக்கடர் என் நாகப்பன் அவர்களுக்கும் , காயிதே மில்லத்பிறை அறிஞர் செ.திவான் அவர்களுக்கும் , செம்மொழி ஞாயிறு கல்வி நா. குப்புசாமி அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தனர். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான வன்னியரசு அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கி தொடங்கிவைத்தார். 
 

அதன்பிறகு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் அலங்கோல ஆட்சியால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒற்றைப்பண்பாட்டை மத்திய அரசு திணிக்கப்பார்க்கிறது. பண்பாட்டு வறுமை, கலாச்சார வறுமை மிகவும் கொடுமையானது. அதனை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. கொடுத்து செழித்த தலித் மக்களை கீழ்மைப்படுத்துகிற நிக்ழவுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்றார்.
 

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: பெரும் தலைவர்களாக இருப்பார்கள். ஆனால் நமக்கு யார் விரோதிகளோ அவர்களோடு அடிமடியில் கைகோர்த்து கொண்டிருப்பார்கள். உண்மைகள் விரைவில் வெளிவரும். திருமாவளவன், தனி சமூகத்தின் ஒரு தலைவராக நான் அவரை பார்த்தது கிடையாது. 


 

 

10 லட்சம் வேலை வாய்ப்புகள் போய்விட்டன. மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் அதை கேட்பதற்கு யாரும் இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அதை கேட்பதற்கு யாரும் இல்லை. தற்போது கார்ப்பரேட் நிறுவன தலைவர்களும் தற்கொலை செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்க மாட்டார் தமிழர்களின் குரலாக ஒளிப்பார்.
 

மூத்த பத்திரிகையாளர் என்.ராம்: எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அம்பேத்கருக்கு நிகராக இருக்க முடியாது. அம்பேத்கர் எழுப்பிய கேள்விக்கு இன்றைக்கும் நம் சமுதாயத்தில் பதில் கிடைக்கவில்லை. இளைஞர்களை வழிநடத்தும் ஒரு தலைவராக இருப்பது மிகவும் பெரியது. அதை திருமாவளவன் செய்து வருகிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் திருமாவளவன் வழி சரியான வழி என்று வரவேற்று இருப்பார். 
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: தலித் அல்லாதவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெருமை. இதற்காக பலர் என்னை விமர்சனம் செய்துக் கொண்டு வருகின்றனர். பிறப்பி;d அடிப்படையில் நாங்கள் விருது வழங்கவில்லை. அவர்களது ஆற்றல் மிகு செயல்பாடுகள் காரணமாக விருதுகள் வழங்கப்படுகிறது.
 

திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொது நீரோட்டத்தோடு இணையும்போது விமர்சனம் செய்கிறார்கள். அதனை கண்டு நாங்கள் துவண்டு போவதில்லை. இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் திருமாவளவனை அழிக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். 


 

 

தேர்தல் வேண்டாம் என நினைத்து தொடக்கப்பட்ட தலித் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சாதி முத்திரைக் குத்தப்படுகிறது. அது தவறு இல்லை. ஆனால் அதில் உள்நோக்கம் உள்ளது. ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் விடுதலை சிறுத்தைகள் போராடி வருகிறது.  
 

39 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. 23 மசோதாக்கள் மீது பேசினேன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான நீரோட்டத்தில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கிறது. எனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குறையவில்லை. பாசிச சக்திகள் கைகளில் நாடு சிக்கிக் கொண்டுள்ளதே என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அவையில் பேச  எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனற வலி எனக்கு உள்ளது. திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளேன்.
 

அமித்ஷா என்ன புரட்சி செய்துவிட்டார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட தனிச்சட்டத்தை ரத்து செய்ததற்காக அவருக்கு ஒட்டுமொத்த அவையே ஆரவாரம் செய்கின்றனர்.  மோடி அவைக்கு வரும் போது ஆரவாரம் செய்தபோது ஏன் இப்படி ஆரவாரம் செய்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து இந்த அவையில் முழங்கவில்லை என்றால்  நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான முழக்கம் எழுப்பப்படும் என்று கூறுகிறார். 
 

நாட்டை ஆளும் உள்துறை அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். ஒரு அநீதியை இழைத்துவிட்டு இவர்கள் கொண்டாட்டம் போடுகிறார்கள். வரலாறு தெரிந்தவர்கள் யாரும் இந்த முடிவை கொண்டாட மாட்டார்கள். அன்னைக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று இன்றைக்கு பேசுவது நியாயமில்லை. எடுத்தோம் என்று கவிழ்த்தோம் பேசிவிடக் கூடாது. காலச் சூழலுக்கு ஏற்றவாறு காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.


 

vck


370 சட்டத்திற்கு எதிராக அம்பேத்கர் என்றைக்குமே பேசியதில்லை. தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பெற்றிருந்தால் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிந்துருக்காது. காங்கிரஸ் கட்சி போதிய வலிமையோடு இல்லாததால் அவர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. 
 

கடந்த தேர்தலில் காங்கிரசோடு கைக்கோர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலியுறுத்தினோம். ஆனால் அதனை அவர்கள் செய்யாதன் விளைவுதான் இன்று நாடு மிகப் பெரிய விளைவை சந்தித்துள்ளது.  மத்திய அரசின் இந்த தவறை எதிர்க்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  விரைவில் ஆர்பாட்டம் நடத்துவோம்.அதற்காக எங்களின்    போர்க்குரலை எழுப்ப பதிவு செய்வோம். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.