Advertisment

நெறியாளர் கேட்ட கேள்விக்கு கடுமையாக பேசிய அர்ஜுன் சம்பத்... வைரலாகும் வீடியோ!

பொருளாதாரம், வேலையின்மை போன்ற பிரதானப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப கொண்டுவரப்பட்டவையே CAA ,NRC, NPR ஆகியவை. இவற்றுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கியது. கோடிக்கணக்கான மக்களின் கையெழுத்து மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புகிறோம் திமுக ஸ்டாலின் தலைவர் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் CAA ,NRC, NPR ஆகியவற்றுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது.

Advertisment

arjun sambath

இந்த நிலையில் நெறியாளரிடம் அர்ஜுன் சம்பத் பேசும் போது, தமிழனை போய் மாட்டை வெட்டி தின்றான் என்று சொல்றிங்களே அதை விட மானக்கேடு, அதை விட தமிழ் துரோகம், அதை விட ஒரு இனத்துரோகம் உண்டா... மாட்டை திங்கிறீங்கன்னு சொல்றிங்களே வெட்கமா இல்லை... நீங்க தமிழன் என்று எப்படி சொல்றிங்க... என்று அர்ஜுன் சம்பத் கூறினார். அதற்கு அந்த நெறியாளர் நான் தமிழன் எனக்கு பிடித்த உணவை சாப்புடுகிறேன். உங்களுக்கு எது தோன்றுகிறதோ அதை எப்படி என்னால் சாப்பிட முடியும் என்று கேட்டார். அதற்கு அர்ஜுன் சம்பத் நெறியாளரை பார்த்து அப்படி மாட்டை வெட்டி சாப்பிட்டால் நீ மானங்கெட்ட தமிழன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நெறியாளரைப் பார்த்து நீ சோழர் பரம்பரை இல்லை, சேர பரம்பரை அல்ல, பாண்டிய பரம்பரை அல்ல, நீ மறத்தமிழன் அல்ல, அப்படி இருந்திருந்தால் நீ மாட்டுக்கறி சாப்பிட மாட்ட என்றும், நீ ஒரு மானங்கெட்ட தமிழன் என்றும் கடுமையாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

video Speech politics news Leader Arjunsampath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe