Advertisment

'கோவாவில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்' - தமிழக முதல்வர் கண்டனம்

 'Hindi is the official language and not the national language'; Chief minister condemns player for insulting Tamil woman

Advertisment

கோவா விமான நிலையத்தில்தமிழ் பெண்ணுக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவரால் மிரட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர் ஒருவர். 'நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர், ’தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று உரத்தக் குரலில் கூறி பாடம் எடுக்கும் வகையில் தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.

மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழி அல்ல. பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சி தன்மையை வலியுறுத்தும் வகையில் தான் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும் என பாதுகாப்பு படைவீரர் பாடம் எடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

flight gova TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe