Skip to main content

ஆ.ராசாவின் வழக்கை அவசர வழக்காக ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்..! 

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

High Court refuses to accept A.Rasa's case as an urgent case

 

திமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நட்சத்திரப் பேச்சாளரும், திமுக எம்பி-யுமான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி பதவி பெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார்.

 

அவர் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். அவரின் விளக்கத்தைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், ‘ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது’. அதேசமயம், திமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.

 

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அதில் அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால், தற்போதைய நிலையில் பிரச்சாரத்திற்குத் தடை விதித்துள்ளதாகவும், அதை எதிர்த்து தொடரவுள்ள வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சனாதன சர்ச்சை; எம்.பி. ஆ. ராசா மீது புகார்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

MP Complaint against A. Rasa for sanatana controversy

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதனிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசும்போது, “சனாதனத்தை டெங்கு மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும் என்று மென்மையாகத்தான் சொன்னார்.  மலேரியா, டெங்கு நோய்களை சமூகம் அறுவறுப்பாகப் பார்க்கக் கூடாது. ஆனால் ஒரு காலத்தில் எச்.ஐ.வி அறுவறுப்பாகப் பார்க்கப்பட்டது. ஆகையால் எங்களைப் பொறுத்தவரையில் தொழுநோய், எச்.ஐ.வி போல் சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் சனாதனத்தைப் பார்க்க வேண்டும்” என்றார்.

 

இந்த நிலையில் சனாதனத்தைத் தொழு நோய் மற்றும் எச்.ஐ.வி நோயுடன் ஒப்பிட்டுப் பேசியதாக ஆ. ராசா மீது டெல்லி வழக்கறிஞர் வினித் ஜிண்டால் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.  ஏற்கனவே சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறி அமைச்சர் உதயநிதி மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆ. ராசா எம்.பி மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.