2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி மீது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து பல கோடி ருபாய் லஞ்சமாக பெற்றார் என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ரத்து செய்யும் படி அன்புமணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

Advertisment

pmk

மேலும் இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி ரோஸ் அவன்யூ சி.பி.ஐ நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சில் தனியார் மருத்துவ கல்லூரிகளைச் சோதனை செய்த போது எடுத்த ஆதாரங்களை வழங்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டார். பின்பு இந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அன்புமணி ஆஜராகவில்லை என்பது குறிப்படத்தக்கது.