High Court confirms MLA Jawahirullah sentenced to 1 year in prison

Advertisment

கடந்த 1997ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், தமிழ்நாடு எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலி என்பவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜவாஹிருல்லா மற்றும் அவரது தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (14-03-25) நீதிபதி அறிவித்தார். அதில் நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய, தண்டனையை 1 மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.