Advertisment

புதுவையில் ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்குப் பதிலாக பணம்! -ஆளுநர் உத்தரவுக்கு எதிரான முதல்வர் வழக்கு விசாரணைக்கு ஏற்பு!

புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அரிசிக்குப் பதிலாக பணம் வழங்க வேண்டுமென ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறின்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தினார். இதனை கவர்னர் கிரண்பேடி ஏற்க மறுத்தார். இந்த விவகாரத்தில் மோசடியைத் தடுக்கும் வகையில் அரிசிக்குப் பதிலாக பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு காலத்தோடு பணம் போய்ச் சேருவதோடு அளவு மற்றும் விலைக்கு ஏற்றவாறு பொதுமக்களே தரமான அரிசியை வாங்கிக் கொள்வார்கள் என கவர்னர் தெரிவித்தார். எனவே, இறுதி முடிவு வரும் வரை தற்போதைய நடைமுறைப்படி அரிசிக்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, விசாரணை நீதிபதி சிவகார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய முதற்கட்ட விசாரணை நடந்தது. அதன் அடிப்படையில் தற்போது புதுவை முதல்வர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்காக வழக்கை எண்ணிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment
Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe