Advertisment

கமல் கூட இனிமேல் கூட்டணி இல்லை!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்தது.மக்கள் நீதி மய்யம் சார்பாக இந்திய குடியரசு கட்சிக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது.ஆனால் அந்த தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த நிலையில் இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் கூறுகையில், 'மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணி முடிந்துவிட்டது' என்றும், இனி அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை தெரிவித்தார்.

Advertisment

mnm

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மைய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாகவும் தற்போது, அந்த கூட்டணி முடிந்து விட்டதாகவும் கூறினார். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது வரும் காலங்களில் தெரியும் என்றும் கூறினார்.

Alliance kamal loksabha election2019 MNM thamilarasu
இதையும் படியுங்கள்
Subscribe