Advertisment

ஓ.பி.எஸ். இல்லம் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு (படங்கள்) 

Advertisment

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இ.பி.எஸ். வீட்டின் முன்பு குவிந்து இனிப்புகள் கொடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். அதேசமயம், ஓ.பி.எஸ். இல்லத்தின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பு இ.பி.எஸ். தரப்புக்கு சாதகமானதால் ஓ.பி.எஸ். இல்லம் வெளியே ஆதரவாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ops admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe