publive-image

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வெற்றிமுகம் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ''பெரு வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல என் வாழ்த்துக்கள்'' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.