டெல்லி மாநாட்டுக்குப் போய்வந்தவர்களால் தான் இங்கே அதிகமாக கரோனா பரவியிருக்கு என்றுசுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஒவ்வொரு பேட்டியிலும் அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்.

Advertisment

இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பீலா ராஜேஷ் நேரடி உறவினர் அல்ல என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதிகாரிக்குரிய தொனியில் நாள்தோறும் கரோனா பாதிப்புகள் பற்றிய விவரங்களை பீலா ராஜேஷ் வெளியிடுகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் அரசியலில் அனுபவமிக்கவர். அதனால், எல்லோருடைய ஆதரவும் நமக்குத் தேவை என்று நினைத்து, அவர் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை மட்டும் சொல்லி வந்தார். குறிப்பிட்ட நிகழ்வு என்று சுட்டிக் காட்டி பாதிப்புக்குச் சாயம் பூசவில்லை என்கின்றனர்.

Advertisment

admk

மேலும் சுகாதாரத்துறை செயலாளரும் அதையே கடைப் பிடித்திருந்தால் தேவையில்லாமல் டென்ஷனும் சந்தேகமும் வந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர். அதோடு கரோனா நேரத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் பாலமாகச் செயல்படுபவர் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான். இதனால் டெல்லி எஃபெக்ட் இருக்கும் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள். மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், இங்க உள்ள நிலவரத்தை டெய்லி அப்டேட்டும் செய்து வருகிறார். அதேசமயம், தமிழகத்தின் பிற நிகழ்வுகள் மூலம் பரவிய கரோனா தொற்று எண்ணிக்கையைக் கூற வேண்டும் என்றும் சில அமைப்புகள் கூறிவருகின்றனர்.