Skip to main content

''அதெல்லாம் அவர் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்''- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

 "He should not tell us all that" - Minister Mano Thangaraj interviewed

 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ''நாட்டின் பல்வேறு பகுதிகளில், பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்போடு இருக்கக்கூடிய சூழ்நிலை தமிழக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இன்னும் கேட்கிறேன் அண்ணாமலை போன்றவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வெறுப்பு பிரச்சாரத்தைக் கக்கி, மக்களைப் பிரிக்கின்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கே நல்ல பாதுகாப்பு இருக்கிறது.

 

அப்படி இருக்கக்கூடிய நிலையில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசுக்கு தெரியாதா? பொது மக்களுக்கே தெரியும் அண்ணாமலை சொல்வது எவ்வளவு வேடிக்கையானது என்று. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பாருங்கள், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடன் இருக்கிறான். அதை இந்த அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது. பிரதமரைப் பாதுகாப்பதற்கு அரசுக்கு தெரியாதா? அதை எங்களுக்கு கற்றுத் தரப் போகிறாரா? இந்த அரசு என்ன எல்.கே.ஜி.யில் இருக்கிறதா? ஐந்தாறு முறை தமிழகத்தை ஆண்ட ஒரு கட்சி அதெல்லாம் அவர் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

வீடு தேடி வந்த பாஜக நிர்வாகிகள்; இன்னும் சற்று நேரத்தில் ஒப்பந்தம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில்  நேற்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது.

நேற்று வரை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பாமக எடுத்த இந்த திடீர் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.