Advertisment

''இனியும் கே.பி.முனுசாமியை விட்டு வைக்கக் கூடாது'' - ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட பகீர் ஆடியோ

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிலிருந்து செய்தியாளர்களைச்சந்தித்தார். இந்த சந்திப்பில் தற்பொழுது இபிஎஸ் தரப்பில் உள்ள கே.பி.முனுசாமி கொளத்தூர் தொகுதியில் பொறுப்பு வழங்க ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, ''ஓபிஎஸ் இடம் இருந்து எல்லா தகவல்களையும் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லி எட்டப்பன் வேலை பார்த்தவர் தான் கே.பி.முனுசாமி. என்னை போல் நிறைய பேர் பணம் கொடுத்து ஏமாந்து இருக்காங்க. அவர்களெல்லாம் தானாக முன்வர வேண்டும். எதற்காக இந்த ஆடியோவை விட்டோம் என்றால் வருங்காலங்களில் கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேரும் அப்பொழுது அவர் நமக்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால் அமைதியாக இருந்தோம். ஆனால் அவர் பேசுகின்ற பேச்சை எல்லாம் பார்த்தால் இனிமேல் அமைதியா இருக்கக்கூடாது.

Advertisment

இனிமேல் அவரை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்துதான் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளோம். இன்னும் இரண்டு நாளில் பதில் வரவில்லை என்றால் அடுத்து வீடியோ ரிலீஸ் பண்ணுவேன். வீடியோ ரிலீஸ் பண்ணா அது மிகப்பெரிய பின்னடைவு. அதன் பிறகு அவரை எடப்பாடி தரப்பில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். முனுசாமியை பற்றி யாருக்கும் தெரியவில்லை இன்னும். கட்சிய தாங்கி பிடிக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா அதனாலதான் இதனை வெளிப்படுத்தியுள்ளோம். ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. அந்த ஆடியோ குறித்து எனக்கு பதில் தரவில்லை என்றால் தங்கமணி, வேலுமணி கொடுத்த வீடியோ வெளியாகும்'' என்றார்.

வெளியாகி உள்ள அந்த ஆடியோவில்,

கிருஷ்ணமூர்த்தி: அண்ணா இப்போ ஒரு 50 ரூபாய் கொடுத்து பேசிப்போம் அண்ணே

கே.பி.முனுசாமி: சரி சரி

கிருஷ்ணமூர்த்தி: நாம பேசுற விஷயம் தெரிய வேண்டாம் அண்ணே

கே.பி.முனுசாமி: இல்ல இல்ல

கிருஷ்ணமூர்த்தி: ஏன்னா நான் பழனி அண்ணனை நம்பறதா இல்ல. அவரு ஒரு மாதிரி டைப்பு

கே.பி.முனுசாமி: இந்த விஷயத்தில அவரே நம்பலையே

கிருஷ்ணமூர்த்தி: அண்ணா 11 மணிக்குள்ள 50 ரெடி பண்ணிடுறேன். ஈவினிங் குள்ள 1 ஒன்னு ரெடி பண்ணிடுறேன். எப்படி அண்ணே கொண்டு வரட்டும்

கே.பி.முனுசாமி: சன்ன அனுப்பறேன் கொடுத்துருங்க...

admk audio KPmunuswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe