Skip to main content

’’ஒரு பாட்டுதானே பாடினார்; அது தேச துரோக குற்றமா?’’ - கோவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள்

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
kovan1

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவன் வன்முறையை தூண்டும் விதமாக பாடியதாகவும், போராட்டத்தில் பேசியதாகவும் 2 பிரிவுகளின் கீழ் கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடகர் கோவனை கைது செய்ய மாற்று உடையில் டூரிஸ்ட் வாகனத்தில் சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் கைது செய்ய கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இது குறித்து நம்மிடம் பேசின கோவன் மனைவி, வீட்டில் நானும் அவரும் தனியே இருந்தோம். அப்போ ஒரு சில பேர் மப்டியில் வந்து அவரை வெளியே வர சொன்னார்கள். அப்போது போலிஸ் இல்லாமல் நாங்கள் வெளியே வர மாட்டோம் என சொல்லி என் கணவரை வெளியே வீட்டில் உள்ளே வைத்து தள்ளி கதவை சாத்தினோம். கொஞ்ச நேரத்தில் ஒரு போலிஸ் வந்து நாங்க போலிஸ் தான் என்று சொல்லி கைது பண்ண வந்தார்கள். என்ன வழக்கு, எந்த பிரிவு என்று கேட்டுக்கொண்டு இருந்தோம். தீடீர் என எங்கிருந்தோ வந்த சில பேர் கோவனை  அடித்து இழுத்து இடுப்பில் குத்தியும் தூக்கி சென்றார்கள். அப்போது என்னுடைய மகள், மகன் ஆகியோர் வந்து எனது கணவரை மீட்க நினைத்த போது அவர்களுடைய கையில் காயம் ஆயிடுச்சு. 

 

போலிஸ் வாகனம் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வேனின் முன் பகுதியில் வண்டியில் எல்லோம் போட்டோம். அதையும் மீறி அப்புறப்படுத்தி விட்டு எங்கே அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமல் சென்று விட்டார்கள். 

 

கோவன் கூட்டத்தில் மற்றும் போராட்டத்தில் பேசிய வீடியோ பதிவுகளை பார்த்து திருச்சி கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கோவன் மீது வழக்குகள் பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

 

அப்போது நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். கோவன் நீதிபதி கௌதமன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். அப்போது கோவனுக்கு ஜாமீன் விண்ணப்பம் செய்த வழக்கிறஞர்கள் தரப்பில் 10 வழக்கறிஞர்களுக்கு மேல் ஆஜர் ஆகி, ’ஏல எங்க வந்து நடத்துற ரதயாத்திரை’ என்பது தேச துரோக குற்றமா இதற்கு கைது செய்யலாமா ? ஒரு பாட்டு தானே பாடினார் என்று ஜாமீன் வழங்க கோரினர்.

 

சிறு நேரம் அவகாசம் வழங்கிய நீதிபதி கௌதமன், போலிஸ் மற்றும் கோவன் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதி கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி 15 நாள் திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வேண்டும் என்கிற உத்தரவோடு ஜாமீன் வழங்கினார்.

சார்ந்த செய்திகள்