Advertisment

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஹஸன் மௌலானா..! (படங்கள்)

Advertisment

தமிழகத்தில் 6.04.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்த வாக்கு இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் நடந்த தீவிர விசாரணையில், அந்த இயந்திரம் செயல்பட்டதும், அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. அதனால் வேளச்சேரி தொகுதியில் சர்ச்சைக்குரிய 92வதுவாக்குச்சாவடியில் மட்டும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

வேளச்சேரியில் மீண்டும் தேர்தல் நடைபெறும் பூத்தில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹஸன் மௌலானாவை ஆதரித்து மா. சுப்ரமணியன் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

election campaign congress velacherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe