
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் இன்றுதமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அப்படத்தை வெளியிடக்கூடாது என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத், கரூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரிடம் நேற்றுமனு அளித்தார்.
இந்நிலையில் பாமகவின் இந்த செயல் அரசியல் ஆதாயம் தேடும் செயலாக இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ''இது கவனயீர்ப்புக்காக செய்யப்படுகிற ஒரு அரசியலாகத்தான் தெரிகிறது. நடிகர் சூர்யாவை பொறுத்தவரை ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு பத்தாண்டுகளாக ஏராளமான பணிகளை ஆற்றி வருகிறார். சாதி, மதம், மொழி உள்ளிட்ட வரம்புகளைக் கடந்து அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று வளர்ந்து வருகிற, வளர்ந்திருக்கிற ஒரு திரைக் கலைஞர். அவருக்கு இத்தகைய அரசியல் நெருக்கடி கொடுப்பது ஏன் என விளங்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற கவனயீர்ப்பு அரசியலைச் செய்வது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது. இது வருந்தத்தக்க நிலைப்பாடாக இருக்கிறது. உள்ளபடியே இதற்காக நான் வருத்தப்படுகிறேன்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)