dddd

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் இராமதேவநல்லூர் தயாளன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

Advertisment

வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலேயே அதில் தம்மை இணைத்துக்கொண்ட தயாளன், இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டதயாளன், அப்பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

இராமதேவநல்லூர் தயாளன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment