Skip to main content

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் வசந்தகுமார்... விஜயதரணி எம்.எல்.ஏ.

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
h vasanthakumar

 

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான வசந்த் அன் கோ நிறுவனர் எச்.வசந்தகுமார் சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலமானார்.

 

அவரது மறைவு குறித்து காங்கிஸ் எம்எல்ஏ விஜயதரணி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். குமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கட்சிப் பணி என்று வரும்போது தீவிரமாக செயல்படுவார். எந்த நேரத்திலும் கட்சியை விட்டுக்கொடுக்கமாட்டார்.

 

காங்கிரஸ் கட்சியும் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் இருமுறை நிற்க வாய்ப்பு கொடுத்தது. பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்திருக்கிறது. செயல் தலைவர் பதவி கொடுத்தும் கட்சி அழகு பார்த்தது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி குடும்பத்தினர் மீது அன்பு, மரியாதை உடையவர். அவர்களும் சகோதரர் வசந்தகுமார் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். 

 

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தூணாக இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக விருப்பத்துடன் மக்கள் பணி ஆற்றியுள்ளார். 'வெற்றிப் படிக்கட்டுகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார். 

 

எங்கள் மாவட்டத்தில் ஒன்றாக இணைந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்துள்ளோம். கரோனா காலத்தில் அவரே முன்னின்று பல்வேறு உதவிகளை வழங்கினார். மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியவர். குமரி மாவட்ட மக்களுக்கு நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதேபோல் கடந்த ஓராண்டில் நிறைய பணிகளை செய்திருக்கிறார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எச். வசந்தகுமாரின் மணிமண்டபத்தை திறந்துவைத்த காங்கிரஸ் தலைவர்!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic_2.jpg

 

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நேற்று (28.08.2021) சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நிறுவப்பட்டுள்ள வசந்தகுமார் மணி மண்டபத்தையும் அவரது சிலையையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திறந்துவைத்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மறைந்த வசந்தகுமாரின் மகனும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், “எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ். அழகிரி அவர்களுக்கும் மற்ற தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

kanyakumari lok sabha constituency lok sabha secretariat

 

 

கன்னியகுமாரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 

 

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ஆறு மாதத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன.

 

இதனிடையே கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், "அரசியலில் விருப்பம் இருக்கிறது; ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினரான நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன்" என்றார்.