H. Raja statement about Governor RN Ravi's  Dravidian model statement

Advertisment

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜுன் சம்பத் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆகியோர் நேற்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது எச்.ராஜா, “திராவிட மாடல் என ஒன்று இருக்கிறது என்று சொன்னால், 71 ஆகஸ்ட் 31ம் தேதி தான் துவங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. மற்றபடி யார் திரவிடியன் மாடல் பேசியிருக்கிறார்கள். காலாவதியானது என்பதை விட இது கற்பனையானது. பொருத்தமில்லாமல் ஒருத்தர் திடீர்னு வாயில் வந்ததெல்லாம் உளறினால், அதை நாம் எல்லாரும் கையில் தூக்கிண்டு, இது திராவிட மாடல் என்று பேசிண்டு இருப்பது அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து” என்று தெரிவித்தார்.