தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா இவ்வாறு கூறியுள்ளார்.

dmk bjp

Advertisment

தமிழகத்தில் இந்தி திணிப்பு எனக்கூறும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன். இந்தி திணிப்பு என ஸ்டாலின் விமர்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக தொடர் போராட்டங்களை நடத்தும் என தெரிவித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றங்கள் உள்ளதால், மத்திய சென்னை, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருவது உறுதி. இதை யாராலும் தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.