தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (11ஆம் தேதி)மாலை பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை வேளச்சேரி பகுதியில் வாக்குச்சேகரித்தார்.