Interview

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், எச்.ராஜாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,

Advertisment

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை செய்து வருகிறது. மாற்று கருத்து கொண்டிருந்தாலும் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தது. நீதிமன்றம் குறித்த அவதூறு கருத்தை ராஜா மறுத்துள்ளார். உண்மையை சொல்வதற்கு ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.