H King's Declaration; BJP shock!

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அறிவித்துள்ளார். பாஜகவின் 44 ஆவது ஆண்டு நிறைவு நாள் விழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisment

பாஜகவின் 44 ஆவது ஆண்டு நிறைவு நாள் இந்தியா முழுவதும் அக்கட்சியின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டிலும் பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாகலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் பேசியதாவது, வீடுகள் தோறும் மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். 23 ஆண்டுகள்தொடர்ந்து நிர்வாகத்தில் இருக்கும்; ஆட்சி செய்யும் ஒரே தலைவர் உலகிலேயே மோடி ஒருவர் தான். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். அதேநேரம் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜகவே போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணிகளைத்தொடங்க வேண்டும் எனக் கூறினார்.