ADVERTISEMENT

முதல்வராக பதவியேற்க குமாரசாமிக்கு தடையா?

01:25 PM May 22, 2018 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT



கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக காங்கிரஸ் கூட்டணியோடு நாளை முதல்வர் பதவியேற்க உள்ளார் குமாரசாமி. இதற்கிடையே குமாரசாமி முதல் அமைச்சர் பதவியேற்பதற்கு தடை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள இந்து மகா சபை (ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை அமைப்பு) சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குமாரசாமிக்கு போதிய மெஜாரிட்டி இல்லை என்றும், இவரது கட்சியில் 38 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர் என்றும், ஆனால் பாஜகவில் 104 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர் என்றும், சட்டமன்றத்தில் பிரதான கட்சியாக உள்ள பாஜகவைத்தான் முதல் அமைச்சராக பொறுப்பேற்க அழைக்க வேண்டும். மைனாரிட்டியாக மூன்றாம் இடத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை அழைத்திருப்பதும், குமாரசாமி முதல் அமைச்சராக பதவியேற்பதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகவே அ குமாரசாமியை முதல் அமைச்சராக பதவியேற்பதற்கு தடை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் இந்து மகா சபை கோரியுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என நாளை தெரியவரும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

இதற்கிடையே இந்த மனு ஏற்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், சட்டமன்றத்தில் இரண்டு கட்சிகளின் மெஜாரிட்டியோடு குமாரசாமி பதவியேற்பதை நீதிமன்றம் தடுக்காது. இருப்பினும் இந்த ஏற்கப்பட்டு பிறகு விசாரணையில் அது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். மனு ஏற்கப்படுவது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் தான். காரணம், மணிப்பூர், கோவா, நாகலாந்து, பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜக 3ஆம் இடம் மற்றும் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. அம்மாநிலங்களில் சட்டமன்றத்தில் பிரதான கட்சி காங்கிரஸ் கட்சிதான். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மனு ஏற்கப்பட்டால், இதையே முன்னுதாரணப்படுத்தி இந்த 5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருப்பதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம் என்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT