ADVERTISEMENT

குட்கா வழக்கில் இன்று தீர்ப்பு! -திமுகவில் திடீர் பரபரப்பு! 

08:07 AM Aug 25, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசலா பொருட்கள் மிக தாராளமாக கிடைப்பதை நிரூபிக்க, அந்த பொருட்களை தமிழக சட்டமன்றத்துக்குள் திமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சென்றனர். கடந்த 19.7.2017-ல் சட்டமன்றத்தில் நடந்த அந்த விவகாரத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பியது அதிமுக.

திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை கண்டித்த சபாநாயகர் தனபால், இந்த விவகாரத்தை சட்டமன்ற உரிமைக்குழுவிற்கு அனுப்பி வைத்தார்.

இதனை விசாரித்த சட்டமன்ற உரிமைக் குழு, 21 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது திமுக. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்திகுமார் அடங்கிய முதல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது. இதனால் அரசியல் வட்டாரங்களில் திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT