Advertisment

"சசிகலாவை சேர்த்துக்கொள்ளுங்கள்" - துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு...

gurumoorthy speech in thuglak 51st anniversary

திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என துக்ளக் விழாவில் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இவ்விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, "இந்துக்களுக்கு வாக்குவங்கி உருவாகி வருகிறது; வரும் தேர்தலில் குறைவாக இருந்தாலும், அடுத்த முறை மாற்றம் வரும். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம். யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது. திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisment

gurumurthy jp nadda
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe