Skip to main content

முன்னாள் அமைச்சரின் விதி மீறல்...

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

அமைச்சர் பதவி பறிக்கபட்டும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸை இன்று வரையிலும் பயன்படுத்தி வரும் முன்னாள் அமைச்சர்.
 

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 7ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்வார் என  அறிவிக்கப்பட்டது.

 

Manikandan



 

அதற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாகவே மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அரசு பதவியில் இருந்து விலகியும் அரசு சலுகை பெறுவது அரசு விதி மீறலாகும். அமைச்சர் பதவி நீக்கப்பட நாளில் இருந்து இன்று வரையிலும்  6 மாதங்களாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிரின்வேஸ் சாலையிலுள்ள அரசு கெஸ்ட் ஹவுஸ் காலி செய்யாமல் தங்கி வருகிறார் மணிகண்டன். இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய  அதிமுக அரசு கண்டும் காணாமலும் உள்ளது. 
 

அதே போல 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தபோது  எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸ் எந்த முன் அறிவிப்புயின்றி பூட்டு போட்ட அரசுக்கு, தற்போது வரையிலும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டும்  உள்ள முன்னாள் அமைச்சர் மட்டும் அரசு கெஸ்ட் ஹவுஸ் பயன்படுத்தி வருவது அரசுக்கு தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

முன்னாள் அமைச்சர் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ex minister passed away CM MK Stalin obituary

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திராகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இந்திரா குமாரி தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திராகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.