Advertisment

ஈ.பி.எஸ்.க்கு கிடைத்த க்ரீன் சிக்னல்; மத்திய அரசை எச்சரிக்கும் ஓ.பி.எஸ் அணி

Green signal received by EPS; OPS team to warn the central government!

Advertisment

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு சார்பில்அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

பொருளாதார செலவுகளைக் குறைக்கவும் தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்கவும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஆணையகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த வகையில் அதிமுகவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜி20 மாநாட்டிற்காக பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஜி20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற விவகாரத்துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என இந்திய சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஓபிஎஸ் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவார் என்ற கேள்வி எழுந்தது.

Green signal received by EPS; OPS team to warn the central government!

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஈபிஎஸ் தான் வகித்து வந்த இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட்டுத்தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கலந்து கொண்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் பின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் தற்போது வரை இருக்கிறது.

மேலும் ஈபிஎஸ் தனக்கென ஒரு குழுவை அமைத்துக்கொண்டு கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார். இதன் காரணமாக ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் பொதுச் செயலாளர் வழக்கும் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe