அமமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான தினகரனுக்கு ஆதரவாக உள்ள விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி இரத்தினசபாபதி ஆகியோர் மீதும், அண்ணா அறிவாலயத்தில் நடந்த மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் மீதும் அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
கருணாஸ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டனர். இந்த நிலையில் இன்று சபாநாயகர் தனபாலை அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு, கலைச்செல்வன், பிரபு, இரத்தினசபாபதி ஆகியோரை தகுதி நீக்கம் செய்வதற்கான ஆலோசனை என்கின்றனர். மேலும் காங்கிரஸ் - திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள்தான் அதிமுக ஆட்சி நீடிக்குமா, ஆட்சி மாறுமா என்பதை நிர்ணயிக்கும் நிலையில் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதற்கான ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.