Advertisment

ஊழலில் சிக்கியவர்களை காப்பாற்ற நாடகமாடுகிறார் மம்தா பானர்ஜி - ஜி.ரா. பேட்டி

g.ramakrishnan

ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களும், அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Advertisment

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் நிலைமையை பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை என்பது பாஜகவை தோற்கடிப்போம். தேசத்தை பாதுகாப்போம். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசை தோற்கடிப்போம். மேற்கு வங்கத்தை பாதுகாப்போம் என்பதுதான் எங்களுடைய முழக்கம்.

Advertisment

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட சாரதா சிட் பண்ட் ஊழலில் சிக்கியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நேற்று மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் சார்பாக மகத்தான பேரணி நடைபெற்றது. அதை திசைத்திருப்ப வேண்டும் என்பதற்காக நாடகமாடியிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் முன்னணியில் இருக்கும். மேற்குவங்கத்தில் ஊழலில் சிக்கியுள்ள திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி நாடகமாடுகிறார். இவ்வாறு கூறினார்.

interview g.ramakrishnan protest CBI west bengal mamta banarji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe