Advertisment

''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்''

GOVI LENIN - mkstalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நக்கீரன் ஆசிரியரும், பொறுப்பாசிரியர் கோவி.லெனின் அவர்களும் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் அவர்கள் தான் எழுதிய ''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்'' என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

Advertisment

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினிடமும் தான் எழுதிய நூலை அளித்து வாழ்த்து பெற்றார். இதனை, திராவிட இயக்கத்தின் வரலாறை, சாதனையை அதன் தேவையை தன் எழுத்தால் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அண்ணன் கோவி. லெனின் அவர்கள் நம் தலைவர் பற்றி எழுதியுள்ள ''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்'' புத்தகதை பெற்றுக்கொண்டேன். அண்ணனுக்கு என் அன்பும், நன்றியும் என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Advertisment

கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும் பயணம் மேற்கொண்டே முதலமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரது பாதை, பயணம், காலத்திற்கேற்ற செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல். நக்கீரன் வெளியிட்டுள்ள இந்நூலை Nakkheeran Publications, 105 Jani Jahan Khan Road, Royapettah Chennai-600014 என்ற முகவரியில் பெறலாம். புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய : https://bit.ly/3D4MZwM

lenin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe