இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையேற்று நடத்தினார்.