'Governor's Affairs; Let's meet the President'- MP Kanimozhi interview

Advertisment

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் 'அன்பின் பாதை' எனும் அறக்கட்டளை சார்பில் 'எங்கள் மயிலாப்பூர் 'என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியின் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''தேசிய அளவில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி-தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். நிச்சயமாக விரைவில் நேரம் தருவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்'' என்றார்.