“மழுப்பல் பதிலைக் கொடுத்து முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்றவே ஆளுநர் முயல்கிறார்” - அமைச்சர் ரகுபதி பேட்டி

The Governor is trying to save the former ministers by giving an elusive answer - Minister Raghumati Interview

அண்மையில் தொடர்ச்சியாகத் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் இன்னும் அதிகரித்தது. தொடர்ந்து எதிர்ப்பின் காரணமாக ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 'எங்கள் அமைச்சரவையில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை வேகப்படுத்துவதற்கு ஆளுநர் கொடுக்கக்கூடிய அக்கறையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் கே.சி. வீரமணி ஆகியோரின்மீதான வழக்கை துரிதப்படுத்தஏன் ஆர்வம் காட்டவில்லை'எனத்தெரிவித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவர்கள் மீதுவழக்கு தொடர அனுமதி தரக்கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகள் தொடர்பாக ஆளுநர் மாளிகைஇன்று மாலைவிளக்கம் ஒன்றை அளித்தது. அந்த விளக்கத்தில், 'அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்கிறது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் பற்றி மாநில அரசிடமிருந்து விளக்கம் கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான விசாரணையை நடத்தி வரும்மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை எந்த ஒரு தகவலையும் ராஜ்பவனுக்குகொடுக்கவில்லை' என்று விளக்கம் கொடுத்துள்ளது ஆளுநர் மாளிகை.

nn

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை. ஆளுநர் மாளிகையிலிருந்து ஒரு பிரஸ் ரிலீஸ் மட்டும் வந்திருக்கிறது. அந்த பிரஸ் ரிலீசில்என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா மீது சிபிஐ குட்கா வழக்குப் பதிவு செய்திருக்கிறது. ஆளுநர் சிபிஐ நடவடிக்கைக்கு பர்மிஷன் தர வேண்டும். தரவில்லை என்பதை என்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஆளுநர் தரப்பில் இருந்து சிபிஐ நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளோமா இல்லையா என்பதற்கு ஆளுநர் பதில் சொல்லாமல் மழுப்பலாக அண்டர் லீகல் இன்வெஸ்டிகேஷன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். இது இரண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களை காப்பாற்றுவதற்கு ஆளுநர் எடுத்திருக்கின்ற ஒரு தந்திரமான நடவடிக்கை என்பதை நான் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை. ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டுஎதிர்க்கட்சி போல்செயல்படுகிறார்.'' என்றார்.

governor minister ragupathi
இதையும் படியுங்கள்
Subscribe