தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு நெருக்கடிகள் கொடுத்துவரும் நிலையில், ஆர்.என்.ரவியின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.