கவர்னர் டெல்லி விசிட்! பதறிய அதிமுக! பறிபோகும் தமிழக அமைச்சர் பதவி?

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் டெல்லி விசிட் ஆளும்கட்சித் தரப்பில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக கவர்னரை முக்கியமான ஃபைல்களோடு டெல்லி அழைத்திருப்பது பற்றி ஏற்கனவே செய்திகள் வெளி வந்தன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மீதான புகார்கள், இதற்காகவே தூசு தட்டப்படுதுன்னும், அவர்கள் தொடர்பான சி.பி.ஐ.யின் ரிப்போர்ட்டுகளும் அமித்ஷா கைக்குப் போக இருக்குதுன்னும் ஒரு தகவல் பரவியது. டெல்லி அழைப்பின் பேரில் 7-ந் தேதி இரவு கவர்னர் பன்வாரிலால் புரோகித், சில ரகசிய ரிப்போர்ட்டுகளுடன் டெல்லிக்குப் பறந்திருக்கார்.

bjp

தமிழக அமைச்சர்கள் தொடர்பாக வருமான வரித்துறையிடமும் உள்துறை அமைச்சகம் கோப்புகளைக் கேட்டு வாங்கியிருக்குதாம். இதன் அடிப்படையில் சில அதிரடி நடவடிக்கைகள் வேகம் பெற இருக்குதாம். குட்கா விவகாரத்தில் சிக்கிய சிலரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களும் அவரது பதவியும் குறிவைக்கப்பட்டு இருக்குன்னும் டெல்லியிலிருந்து ஒரு ஹாட் தகவல் சொல்லுது. அடுத்தடுத்து பல மந்திரிகள் இதில் சிக்குவார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அமித்ஷா வேலூர் தேர்தலில் அதிமுக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு கூறியதாக சொல்லப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இருந்துள்ளதால் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

admk amithsha governor minister
இதையும் படியுங்கள்
Subscribe