சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள தண்ணீர் தொட்டி தெருவில் நடைபெற்ற அரசு விழாவில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்துறை, ஆகிய துறைகளின் சார்பில்,வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து மற்றும் 29 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழாப்பேருரைஆற்றினார்.