Skip to main content

அரசு நியமனங்களுக்கு கல்தா! -உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணியும் மத்திய-மாநில அரசுகள்! 

Published on 24/05/2020 | Edited on 24/05/2020


 

 vacancies



அரசு பணியிடங்களை காலி செய்ய வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் முக்கிய அஜெண்டா! வளரும் நாடுகளில் இந்த அஜெண்டாவை ஏற்க வைப்பதன் மூலம்தான் கடன் வழங்கி வருகிறது உலக வங்கி. 

                                

 

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டையும் அதில் அடக்குவதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகளை உலக வங்கி எடுத்தது. அதற்கேற்ப, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு, மாநிலங்களில் வலிமையான தலைவர்கள் கோலோச்சியதால் எதிர்ப்புகள் கடுமையாக எதிரொலித்தன. இதனால், உலக வங்கியின் அஜெண்டா நிறைவேறவில்லை. 
                            

தற்போது, உலகமெங்கும்  கரோனா விவகாரம் அதிகரித்துள்ள நிலையில், வளரும் நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை மீண்டும் விரிக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார இழப்புகளையும் சரிவுகளையும் கணக்குப்போடும் உலக வங்கி மற்றும் அரசாங்கங்களுக்கு கடன் வழங்கும் பல்வேறு நிதி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு பல பரிந்துரைகளை செய்திருக்கின்றன. 
                          

அதில் மிக முக்கியமானது, அரசு பணியிடங்களை காலி செய்வது மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிப்பது என்பதுதான். இதனடிப்படையில் தமிழக அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. அதன்படி முதல்கட்டமாக, காலி பணியிடங்களை புதிய நியமனங்கள் மூலம் நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது எடப்பாடி அரசு. இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தலை’ இல்லாமல் செயல்படும் 3,343 அரசுப் பள்ளிகள்; நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம்!

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

3343 government schools functioning without a headmaster
மாதிரி படம்

 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகும் நிலையில், 3,343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

 

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்பித்தல் நடைமுறை, பாடத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. போதாக்குறைக்கு தற்போது 3000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும்போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

 

தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப் பள்ளிகள், 435 உயர்நிலைப் பள்ளிகள், 1003 நடுநிலைப் பள்ளிகள், 1235 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 3343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்குதல், மிதிவண்டி, மடிக்கணினி வழங்குதல் மற்றும் ஆசிரியர்களின் வருகை, கல்வி, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நிர்வாகப் பணிகளும் தலைமை ஆசிரியர்களைச் சார்ந்துதான் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அங்கு பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர் ஒருவருக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கையாள வேண்டிய பாட வகுப்புகள் பாதிக்கப்படும். மேலும், அவருக்கு சக ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பும் அளிக்கமாட்டார்கள். அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளிக்கல்வித்துறை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

Next Story

கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி தடுப்பூசி... அதிர்ச்சியை கொடுத்த சம்பவம்!

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

 Rabies vaccine instead of corona vaccine ... shocking incident!

 

கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்ற நோக்குடன் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் முடிந்து இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் வரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேசத்தின் லாகீம்பூர் அருகே உள்ள நயாபுர்வா என்ற இடத்தில் ஒருவர் கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற நிலையில் ஏற்கனவே அவர் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பான தகவலை கோவிட் இணையதளத்தில் பெற அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது முதல் டோஸாக வெறிநாய்கடிக்கான மருந்து செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் அந்த நபரின் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கரோனா தடுப்பூசிக்கு பதிலாக எப்படி வெறிநாய்கடி தடுப்பூசி தவறுதலாக செலுத்தப்பட்டது என்று விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.