ADVERTISEMENT

'ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காது'' - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

12:33 PM Apr 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று மாலை தமிழக ஆளுநர் தரும் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்தனர்.

ஏற்கனவே சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரைச் சந்தித்து பேசினோம். நீட் எதிர்ப்பு மசோதாவின் மீது ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும் என்றும், இது தொடர்பான வலியுறுத்தலை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆளுநருக்கு கொடுக்கவேண்டும் என முதல்வர் நேரில் வலியுறுத்தியிருந்தார். இத்தனைக்கு பிறகும்கூட அந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் தனது ஒப்புதலைத் தரவில்லை. இதனால் சட்டமன்றத்தின் மாண்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற மாண்புகளையும், தமிழக மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை. தற்பொழுதுவரை ஆளுநர் இதுகுறித்து எந்த உத்திரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை திறப்பு நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT