raja

Advertisment

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பழனியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி விவகாரம் குறித்து பதிலளித்தார். அப்போது அவர், ‘’அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தால்தான் காவிரி விவகாரத்தில் பணிகள் துரிதமாக முடியும். நான்கு மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு மத்திய அரசின் அதிகாரத்தில் கொண்டு வரவேண்டும். தமிழக அரசும் அணைகளின் கட்டுப்பாட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது’’என்று தெரிவித்தார்.