அரியலூரில், ரூ.347 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

Advertisment

இதற்கான அழைப்பிதழ் தயாரானபோது அதிகாரிகள் அவரிடம் சென்று, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அரியலூர் வருவதால் அதன் எம்.பியான திருமாவளவன் பெயரைச் சேர்ப்பது பற்றி கேட்டுள்ளனர். அதற்கு எடப்பாடியோ அதெல்லாம் வேண்டாம். அவருக்கு அழைப்புகூட அனுப்பத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.

Advertisment

இதையெல்லாம் அறிந்த திருமாவளவன் தரப்பு, மத்திய அரசின் 60 சத நிதியோடுதான் மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனக்குத் தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், மாநில அரசு என்னைப் புறக்கணித்ததன் மூலம், எடப்பாடி தனது அரசியல் காழ்ப்பைக் காட்டியிருக்கிறார் என்று டெல்லி வரைக்கும் புகார் தெரிவித்திருக்கிறாராம்.